இந்திய பெண்கள் முதல் வெற்றி * தென் ஆப்ரிக்காவை வென்றது | ஜனவரி 20, 2023

தினமலர்  தினமலர்
இந்திய பெண்கள் முதல் வெற்றி * தென் ஆப்ரிக்காவை வென்றது | ஜனவரி 20, 2023

 ஈஸ்ட் லண்டன்: முத்தரப்பு ‘டி–20’ தொடரில் முதல் வெற்றி பெற்றது இந்திய பெண்கள் அணி. தென் ஆப்ரிக்காவை 27 ரன்னில் வீழ்த்தியது. 

தென் ஆப்ரிக்க மண்ணில் பெண்களுக்கான ‘டி–20’ உலக கோப்பை தொடர் பிப். 10–26ல் நடக்கவுள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் தென் ஆப்ரிக்க மண்ணில் முத்தரப்பு ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. 

கிழக்கு லண்டனில் நடந்த முதல் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா மோதின. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. 

அறிமுக அசத்தல்

இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா (7), யஸ்திகா ஜோடி சுமார் துவக்கம் தர, ‘மிடில் ஆர்டரில்’ ஹர்லீன் (8), ஜெமிமா (0), தேவிகா (9) கைவிட்டனர். யஸ்திகா 35 ரன் எடுத்தார். பின் வரிசையில் தீப்தி (33) கைகொடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 147 ரன் எடுத்தது. அறிமுக வீராங்கனை அமன்ஜோத் கவுர் (41) அவுட்டாகாமல் இருந்தார்.

தீப்தி ‘மூன்று’

அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு லாரா (6), ஆன்னெகே (2) ஏமாற்றம் தந்தனர். மரிஜான்னே (22), கேப்டன் சுனே லஸ் (29), சோலே (26) தவிர மற்ற வீராங்கனைகள் அணியை கைவிட்டனர். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 120 ரன் மட்டும் எடுத்தது. இந்தியாவின் தீப்தி 3, தேவிகா 2 விக்கெட் சாய்த்தனர். 

 

மூலக்கதை